கோவையில் விநாயகர் சிலைகளுக்கான சிறப்பு கண்காட்சி.!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். கடந்த 40 வருடங்களாக இவர் மண்பாண்ட தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவர் விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை செய்வது வழக்கம்

ஆனால் இந்த முறை புவி வெப்பமயமாவதை குறைக்கும் வகையில் நாவல், நெல்லி உள்ளிட்ட விதைகளை களி மண்ணின் உள்ளே வைத்து சிலைகளை வடிவமைக்கிறார். 

இவ்வாறு செய்வதால் மக்கள் ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்த பிறகு விதைகள் மரமாக மாறும், அது புவி வெப்பமயமாவதை குறைக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதை விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்துள்ளேன்

அரை அடி ஒரு அடி அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிலைகளில் நாவல் பழம், நெல்லி உள்ளிட்ட மர விதைகளை சேர்த்து வைத்துள்ளேன்

இதற்காக தாமிரபரணி கரையோர வயல்களில் களிமண்ணை சேகரித்து கல் நீக்கி பதப்படுத்தி சிலைகளை தயாரித்து உள்ளேன்

இதில் ரசாயன கலப்பு ஏதும் இன்றி வாட்டர் கலர் கொண்டு சிறிதளவு வண்ணம் தீட்டியுள்ளேன். அரை அடி சிலை 100 ரூபாய் ஒரு அடி சிலை 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொதுவாக சிலைகளை ஆறு குளம் ஆகிவற்றில் கரைப்பார்கள்‌

அப்போது விதைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கும் இடங்களில் முளைத்து பசுமை காடுகளாக மாறும். இது பொது மக்களுக்கும் உற்சாகத்தை தரும் இயற்கையும் பாதுகாப்பாக இருக்கும். எனவே இவ்வாறு செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்

விவசாயி, பாடிபில்டர், புல்லட் பைக் ரைடு என பக்தர்களை மிரள வைக்கும் விநாயகர்.!