விநாயக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படும்
பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துவிடுவர்
அந்த வகையில் கடந்த 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது . விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பாஜக, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 50க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன
இந்நிலையில் 3ம் நாள் அன்று தஞ்சை ரயில் நிலையத்தில் சுமார் 62 விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டது
விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் செண்டை மேளம் மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சிகள் விமர்சையாக நடந்தது
இதனையடுத்து காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாகச் சென்று வடவாற்றில் கரைக்கப்பட்டன
இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையொட்டி, போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்