தினமும் ரூ.1000 வருமானம்... இயற்கை முறையில் வெண்டைக்காய் சாகுபடி செய்யும் விருதுநகர் விவசாயி.!

உணவே மருந்து என்ற காலம் போய் இன்று மருந்தே உணவு என்றாகி விட்டது. இதற்கு காரணம் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை நோக்கி சென்றது தான் என்று கூறப்படும்

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாத்தாவு. விவசாயியான இவர் செயற்கை உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்

அந்த வகையில் தற்போது ஒரு ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிட்டு வருமானம் ஈட்டி வருகிறார். கிலோ 40 ரூபாய் என்ற வகையில் ஒரு நாளைக்கு 900 முதல் 1200 வரை கிடைக்கும் என்றார்

மேலும், பூச்சி கடி தாக்குதலில் இருந்து வெண்டைக்காய் செடிகளை பாதுகாக்க வேப்பிலை, வெள்ளை பூண்டு போன்றவற்றை இடித்து மருந்தாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்

விளைச்சலை பொறுத்தவரை செயற்கை உரங்களுக்கு ஈடாக ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைக்கும் என்றவர் சுவையில் இயற்கை வெண்டை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்கிறார்

Stories

More

குழந்தைகளுக்கு காலையில் காபி, டீ  கொடுப்பதை விட இதை கொடுங்கள்....!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

தேன் வளர்ப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா.?

இயற்கை முறையில் உருவானது மற்றும் சுவையானது என்பதால் மார்க்கெட்டில் இந்த வெண்டைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய விரும்புவதாக சாத்தாவு தெரிவித்தார்

அசாத்திய தன்னம்பிக்கையால் வெற்றிகளை குவித்து வரும் நெல்லை பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்.!