தென் மாவட்டங்களில் கோவிலுக்கு நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு வந்து அக்னி சட்டி எடுப்பது, பறவை காவடி, தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றுவர்
இந்த நேர்த்திக்கடன்களில் மண் பொம்மைகள் வாங்கி வைக்கும் முறையும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது
இதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பே பொம்மைகள் செய்யும் வேலைகளை தொடங்கும் வியாபாரிகள் சரியாக பொங்கல் நேரத்தில் விருதுநகருக்கு வந்து விற்பனையை தொடங்குவர்
இது குறித்து பேசிய பொம்மை வியாபாரி முத்துக்காமாட்சி, இந்த ஆண்டு விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி என மூன்று ஊர்களிலும் ஒரே நேரத்தில் பொங்கல் வருவதால் இந்த முறை விற்பனை சற்று மந்தமாக தான் உள்ளது என்றார்
மேற்சொன்ன ஊர்களிலும் இதே போன்று பொம்மை வாங்கி வைக்கும் வழக்கம் உள்ளது எனினும் விருதுநகரில் பொம்மை விற்பனை அதிகம் என்கிறார்கள் விற்பனையாளர்கள். பொங்கல் நேரத்தில் மட்டும் அல்ல சாதரண நாட்களிலும் பொம்மை வாங்கி வழிபடும் வழக்கம் உண்டு
இங்கு, இந்த பொம்மைகளை ஏன் வாங்கி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு, இப்போ ஒரு ஆண் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்றால் ஆண் பொம்மை வைக்க வேண்டும், பெண்ணுக்கு பெண் பொம்மை , திருமணம் ஆக ஜோடி பொம்மை,
வீடு கட்ட வீடு பொம்மை, கார் வாங்க கார் பொம்மை, ஆடு மாடு செல்வம் பெரு ஆடு மாடு பொம்மை, குழந்தை வரம் பெற குழந்தை பொம்மை, கால் கை கண் நலம் பெற கண் , கால், கை பொம்மை வாங்கி வைக்க வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்
வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு அவர்களே கோவிலுக்கு வந்து பொம்மை வாங்கி வைப்பர் பொதுவாக சாதாரண நாட்களிலும் பொம்மை வாங்கி வைக்கலாம். ஆனால் திருவிழா நேரம் என்பதால் பொம்மை வாங்கி வைக்கும் வழக்கம் சற்று அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது