ஆன்மீக ஸ்தலமாக கருதப்படும் காசிக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,
காசிக்கு வரும் தமிழக பக்தர்கள் பயன் பெறும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வழியாக வாரனாசி வரை புதிய ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளது
காசி மற்றும் தமிழக நகரங்களை இணைக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் வாராந்திர ரயிலாக இயக்கப்பட உள்ள ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு 8.55 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு இரவு 1 மணிக்கு விருதுநகர் வந்தடையும்
மீண்டும் சனிக்கிழமை இரவு 11.20 க்கு வாரனாசி சென்றடையும். மீண்டும் ஞாயிறு மாலை 4.20 க்கு அங்கிருந்து புறப்படும் ரயில் செவ்வாய் கிழமை மாலை 4.20 க்கு விருதுநகர் வந்தடைந்து இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்
விருதுநகர் மட்டுமல்லாது மதுரை, தஞ்சாவூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களிலும் நிறுத்தம் செய்யப்பட்டு தமிழக ஆன்மீக நகரங்களை காசியோடு இணைக்கும் வகையில் உள்ள
இந்த ரயில் சேவை ஏற்கனவே பிரதமர் மூலம் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், பயணிகளுக்கான அதிகாரப்பூர்வ ரயில் சேவை வரும் டிசம்பர் 28 ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது