200 ரூபாயில் ட்ரக்கிங் போகலாம்...  விருதுநகரில் ஒளிஞ்சு இருக்க மினி குற்றாலம்.!

பொதுவாக வறண்ட மாவட்டமாக அறியப்பட்டு வரும் விருதுநகரின் பெயரை சொன்னாலே பலருக்கு‌ வெயிலும், காய்ந்த கரிசல் காடும் தான் நினைவுக்கு வரும்

ஆனால் உண்மையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வறண்ட மாவட்டமல்ல மாவட்டத்தின் கிழக்கு பகுதி பசுமையாகவும், மேற்கு பகுதி வறண்ட கரிசல் நிலமாகவும் உள்ளது

இதில் பசுமையான கிழக்கு பகுதியில் சில சுற்றுலா தளங்கள் உள்ளன. அப்படி பட்ட ஒரு இடம் தான் செண்பக தோப்பு. செண்பக தோப்பு ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பசுமை சார்ந்த பகுதி என்பதால் இங்கு வந்து செல்ல உள்ளூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்த வனப்பகுதியில் குளித்து மகிழ ஆங்காங்கே சிற்றோடைகள் அமைந்துள்ளது. அதில் முக்கியமானது பேச்சியம்மன் கோயில் ஓடை, மேலும் மலையின் மேற்பகுதியில் மீன்வெட்டி அருவி எனும் அருவி இருப்பதால் இங்கு வந்து செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

சாம்பல் நிற அணில் சரணாலயமாக இருந்த இந்த பகுதி மேகமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்ட பின்பு வனத்துறை தரப்பில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

அதன்படி வனப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயில் & அதன் அருகில் உள்ள ஓடைக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் மாலை நான்கு மணி வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

மலைக்கு மேல் உள்ள மீன்வெட்டி அருவி & காட்டழகர் கோவிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது

Stories

More

தஞ்சை அருகே சுற்றுலா தளமாக மாறி வரும் குப்பை கிடங்கு..! 

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் வர வேண்டும்.அங்கிருந்து காலை மற்றும் மாலையில் செண்பக தோப்பிற்கு பேருந்து வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பைக் மற்றும் கார்களில் தான் செல்ல வேண்டும்

வனப்பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்,நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணமும், வாகனங்களுக்கு 20 ரூபாய் பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது

மொத்தத்தில் வெளியில் எங்கும் செல்லாமல் அருகில் எங்காவது சென்று வர வேண்டும், ட்ரக்கிங் அனுபவம் வேண்டும் என்பவர்கள் தாரளமாக செண்பக தோப்பு சென்று வரலாம். அதிலும் இங்கு சென்று வர ஒரு நபருக்கு அதிக பட்சம் 200 ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அழகிய சாய்பாபா கோயில்.!