மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வரதாச்சாரியாா் நகர பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-இன்கீழ் மேம்பாட்டு பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்தது
இந்த வரதாச்சாரியாா் பூங்காவில் நடைபயிற்சியாளா்களுக்கு தேவையான நடைமேடை, இளைஞா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், அனைத்து வயதினருக்கான யோகா மையம்,
குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆம்பிதியேட்டா் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் ரூ.49 லட்சத்தில் இந்த பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து இந்த பூங்காவில் உள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாசுபாடு பற்றிய ஓவியங்கள் வரைய ஓவிய போட்டி நடத்தப்பட்டது
இதில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிபடுத்தினர். இந்த போட்டி கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது
இப்போட்யில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும்போது இந்த வரதாச்சாரியாா் பூங்காவில் சுவர் ஓவியம் வரைய ஓவிய போட்டியாக வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதன் மூலம் எங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்ததாக தெரிவித்தனர்
இப்போட்யில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறும்போது இந்த வரதாச்சாரியாா் பூங்காவில் சுவர் ஓவியம் வரைய ஓவிய போட்டியாக வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,
இதன் மூலம் எங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.
மேலும் இதன் மூலம் மக்களுக்கு எங்களால் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்தது பெறுமையாக தெரிவித்தனர்