ஒரு மாதம் பால் குடிப்பதை தவிர்த்தால் என்ன நடக்கும்.?

பெரும்பாலான நபர்களின் உணவுகளில் பால் ஒரு முக்கிய இடத்தை கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய கலாச்சாரத்தில் பால் பல்வேறு விதமான உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

பாலில் கால்சியம் சத்து உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்பட்டாலும் அதனை அதிகப்படியான அளவில் குடிப்பதால் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகிறது

ஒரு மாத காலத்திற்கு பால் குடிக்காமல் இருக்கும் பொழுது உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்

பால் குடிப்பதை நிறுத்திய உடனேயே உங்களுக்கு லேசான வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லை ஏற்படலாம்

பால் மூலமாக கிடைத்த கால்சியம் ஊட்டச்சத்து உட்கொள்ளல் குறைவதன் காரணமாக எலும்பு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

பால் சார்ந்த பொருட்கள் காரணமாக ஏற்பட்ட சென்சிடிவிட்டி பிரச்சனையினால் உண்டான சரும கோளாறுகளில் முன்னேற்றம் காணப்படும்

Stories

More

பப்பாளி விதைகளை சாப்பிடக்கூடாதா..?

இளைஞர்களை அதிகமாக தாக்கும் எலும்பு புற்றுநோய்...

காலிஃப்ளவரை அதிகமா சாப்பிட்டால் இத்தனை பிரச்சனை வருமா..?

பாலை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். எந்த ஒரு உணவு மாற்றத்தை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது கட்டாயம்

பாலானது புரோட்டீன் மற்றும் வைட்டமின்களின் மூலமாக இருப்பதால் பால் சாப்பிடுவதை கைவிட்ட பிறகு உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதும் முக்கியம்

நீங்கள் வழக்கமாக பால் குடித்து வந்த நபர் என்றால் பாலை நிறுத்திய உடன் கால்சியம் மற்றும் வைட்டமின் D ஊட்டச்சத்து குறைபாடு உங்களுக்கு ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம்

கால்சியம் என்பது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து. அதே நேரத்தில் வைட்டமின் D கால்சியம் உறிஞ்சிதலை மேம்படுத்துகிறது

புரோட்டீன் மற்றும் கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்கு நீங்கள் பாலை மட்டுமே சார்ந்து இருந்தீர்கள் என்றால் பாலை நிறுத்தியவுடன் இந்த ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கான வேறு சில உணவுகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

More Stories

ஒரு மாதத்திற்கு கோதுமையே சாப்பிடவில்லை என்றால் என்ன ஆகும்.?

புற்றுநோய் வர காரணமாக இருக்கும் உணவுகள்.!

சருமத்தை பராமரிக்க இஞ்சியை இப்படியும் பயன்படுத்தலாமா..?

Tooltip
Tooltip
Tooltip

தாவர அடிப்படையிலான பால், இலை கீரைகள், நட்ஸ், விதைகள், கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் ஆகியவை பாலுக்கு ஆரோக்கியமான மாற்றாகும்

நமது உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் உட்பட அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதே நமது இறுதி குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது

நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், பாலை தவிர்ப்பது உங்களை நன்றாக உணர உதவும், மேலும் பால் இல்லாத உணவுகளை விரும்புபவர்கள் மாற்று வழிகளை நாட வேண்டும்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால்  கிடைக்கும் 5 நன்மைகள்.!