ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும்.?

ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவாக அரிசி சாதம் இருந்து வருகிறது

ஆனால் அதிக அளவு அரிசி உணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு

அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள், ஸ்டார்ச் மற்றும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது

அதே சமயத்தில் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கும்

ஆனால் அதற்காக அரிசி உணவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட வேண்டும் என்று கூறி விட முடியாது

ஒரு மாதத்திற்கு நீங்கள் அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை உணவு நிபுணர்கள் கூறியுள்ளதை அடுத்தடுத்த ஸ்லைடில் காணலாம்

ஒரு மாதம் அரிசி உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது உங்கள் உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு

கார்போஹைட்ரேடுகள் உட்கொள்ளாத காரணத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்

அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைக்க உதவும்

அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்களையோ அல்லது அதே அளவு கலோரிகளை தரும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்

மேலும், ஒருவர் மீண்டும் அரிசி சாப்பிட ஆரம்பித்தால், குளுக்கோஸ் அளவு மீண்டும் ஏற்ற இறக்கமாக இருக்கும்

அரிசி உணவை கைவிடுவதால் அரிசியின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின் பி மற்றும் சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம். எனினும் இது நபருக்கு நபர் வேறுபடலாம்

ஆனால் உண்மையிலேயே அரிசி உணவை மொத்தமாக உங்களது உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும்

அது மட்டுமல்லாமல் இந்த செயல்முறை தசைகள் வலுவிழிப்பதற்கும் உடலில் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கும்

ஒரு மாதத்திற்கு அரிசியைத் தவிர்ப்பது காரணமாக நார்ச்சத்து குறைவதால் செரிமானத்தை சீர்குலைக்கலாம் மற்றும் குடல் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்

உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தசைகளை குறைப்பது நோக்கமாக இருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கைவிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். மேலும், மருத்துவ ஆலோசனைக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள்.!