உங்கள் டீ, காபியில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்தால் என்ன ஆகும்?

நாம் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்தால் உடலில் பல்வேறு ஆச்சரியாமான ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும். நாம் தினசரி பருகும் காபி, டீயில் சர்க்கரையை தவிர்ப்பது உடலுக்கு எந்தெந்த வகைகளில் நன்மைகள் அளிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

உங்கள் டீ, காபியில் சர்க்கரையை தவிர்ப்பது உடலுக்கு தேவையற்ற கலோரியை குறைக்க உதவுகிறது. அதிக கலோரி உட்கொள்ளல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். அதனால் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் எளிதாக தேவையற்ற கலோரியை குறைக்க முடியும்.

குறைவான கலோரி உட்கொள்ளல்

சர்க்கரை ஆற்றல் அளவுகளின் ஏற்ற இறக்கங்களை அதிகம் பாதிக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடலுக்கு நிலையான ஆற்றலை நாள் முழுவதும் பராமரிக்க உதவுகிறது.

நிலையான ஆற்றல்

காபி, டீயில் சர்க்கரையை தவிர்ப்பது போன்ற சிறிய மாற்றம் கூட உடலில் Inch loss நடக்க வழிவகுக்கும். காலப்போக்கில் எடையும் குறையும்.

எடை இழப்பு

சர்க்கரை பல் சிதைவு மற்றும் சொத்தை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். உங்கள் தினசரி காபி, டீயில் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் பற்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

வாய்வழி ஆரோக்கியம்

சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கும்போது. சுவை மொட்டுகள் மாற்றியமைக்கப்படுகிறது. காலப்போக்கில் டீ, காபியின் இயற்கையான சுவையை நீங்கள் அதிகம் பாராட்ட தொடங்குவீர்கள். 

சிறந்த சுவை உணர்திறன்

அதிக சர்க்கரை நுகர்வு இதய நோய்களுடன் தொடர்புடையது. சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகள் உருவாக்கும் அபாயம் குறையும். இது சிறிய முயற்சியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நன்மையளிக்கும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இங்கு வழங்கப்பட்ட ஆலோசனை உள்ளிட்ட உள்ளடக்கம் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தகுதிவாய்ந்த மருத்துவக் கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை. News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

பொறுப்புத் துறப்பு:

next

முளைக்கட்டிய பச்சை பயிறின் ஆரோக்கிய நன்மைகள்.!