சர்க்கரை நோயாளிகள் மருந்து சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நிறுத்திய பிறகு உடல் நலத்தில் பெரிதளவு மாற்றம் ஏற்படவில்லை என்றாலும்கூட, இரத்த சர்க்கரை அளவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், சரியான கண்காணிப்பு மற்றும் மருந்துகள் மூலம் தொடர்ந்து பராமரிப்பு தேவைப்படும் ஒரு நாள்பட்ட நிலையே 'நீரிழிவு நோய்' என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR).
சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை. ஆனால் நோய் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் பட்சத்தில், சரியான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் நோய் பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் அறிகுறியற்றதாக இருக்கலாம். அதனால் நோயாளிகள் எப்படி உணர்கிறார்கள் என்பதன் அடிப்படையில், அவர்களின் நிலையை மதிப்பிடுவது தவறாக இருக்கக் கூடும்.
நீரிழிவு மருந்துகளை திடீரென நிறுத்துவது நோய்த்தொற்றுகள் மற்றும் Diabetes Ketoacidosis போன்ற கடுமையான சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். இது உயிருக்கு ஆபத்தானது.
நீரிழிவு நோய்க்கு எடுக்கப்படும் மருந்துகள் நிறுத்தப்பட்டாலோ, குறைக்கபட்டாலோ, நோயாளிகளுக்கு பார்வை திறன் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படுவது போன்ற நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
முறையற்ற நீரிழிவு மேலாண்மை மூலம் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகளின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
சரியான நீரிழிவு மேலாண்மைக்கும். அதன் மூலம் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை தடுப்பதற்கும் நிலையான சிகிச்சை மற்றும் தகுந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனை அவசியம்.
இங்கு வழங்கப்பட்ட ஆலோசனை உள்ளிட்ட உள்ளடக்கம் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தகுதிவாய்ந்த மருத்துவக் கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை. News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உலர் பழங்கள்!