நல்ல ஆரோக்கியத்திற்காக தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது.?

சந்தேகத்திற்கு இடமின்றி தண்ணீர் மனித உடலின் மிக முக்கியமான அங்கமாகும்

தாகமாக இருக்கும் போது தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நீரேற்றமாக இருக்க உதவும்

ஆரோக்கியமான உடலுக்கு நீரேற்றம் இன்றியமையாதது, சீரான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் நோயை தடுக்க உதவுகிறது

காலையில் எழுந்தவுடன்...

உறுப்புகளை செயல்படுத்துவதற்கும், உடலில் நீரேற்றத்தை நிரப்புவதற்கும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது

குளிப்பதற்கு முன்...

குளிப்பதற்கு முன் தண்ணீர் உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

உடற்பயிற்சிக்குப் பின்...

புத்துணர்ச்சி மற்றும் உடலின் சக்தியை மீட்பதற்காக உடற்பயிற்சிக்கு பின்னர் தண்ணீர் குடித்து உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யுங்கள்

உணவுக்கு முன்...

உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தவும், நல்ல செரிமானத்திற்கும் உதவுகிறது மற்றும் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

நீங்கள் சோர்வாக இருக்கும்போது...

நீங்கள் சோர்வாகவும், களைப்பாகவும் இருக்கும்போது அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலை ரீசார்ஜ் செய்ய உதவும்

உடல்நிலை சரியில்லாத போது...

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தண்ணீர் குடிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். இது உங்களை நீரேற்றமாக வைக்கவும் மற்றும் உடலை மீட்கவும் உதவுகிறது

உறங்குவதற்கு முன்...

உறங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடலை ஹைட்ரேட் செய்கிறது, நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் வயிற்று வலியை நீக்குகிறது

next

எலுமிச்சையுடன் சியா விதைகளை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்.!