தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் கடந்த 7ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது
நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்தது. டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்கள், ரூ.1000 ரொக்கம் பெறலாம்
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பொங்கல் பரிசு மத்திய அரசு, மாநில அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், எந்தப் பொருளும் பெறாத குடும்ப அட்டை வைத்திருப்போா், சா்க்கரை அட்டைதாரா்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர்
அஞ்சு கிராமம் அடுத்த பொட்டல் குளம் பகுதியில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு தொகை காண டோக்கனை விநியோகம் செய்தனர்
டோக்கனை பெற்றுக் கொண்ட பயனாளிகள் பொங்கல் பரிசுத்த வகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்