இனிப்பு சுவைமிக்க பழம் என்பதை கடந்து பேரிட்சையில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துகள் உள்ளன. இரும்புச் சத்து, ஃபோலேட், புரோட்டின், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்து இருக்கின்றன
உணவை உட்கொள்ளும் போதெல்லாம் நம் உடலுக்கு ஜீரணிக்கும் திறன் உள்ளது. ஆனால், எந்தநேரத்தில் எத்தனை சாப்பிட வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். எரிச்சல் கொண்ட குடல் நோய் (IBS) அறிகுறிகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி நேரத்துக்கு தகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பேரிட்சம் பழங்களில் பிரக்டோஸ் இருப்பதால், வெறும் வயிற்றில் உண்ணும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து, கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.
ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்துகொள்ளும். வாயு மற்றும் வயிறு வீக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும். உணவு ஒவ்வாமை அல்லது வயிற்றுபோக்கு பாதிக்கப்பட்டவர்கள் பேரிட்சை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிறிய துண்டுகளாக குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வது ஆகச்சிறந்தது.
ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது. பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. நாள்தோறும் பேரிட்சை சாப்பிட்டால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
அதிகாலையில் பேரிட்சம் பழம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கும். மேலும், காலையில் இவற்றை உட்கொள்வது குடல் புழுக்களைக் கொல்ல உதவுகிறது. இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முக்கிய உறுப்புகளில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்தும் ஆற்றல் பேரிட்சைக்கு உள்ளது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமம் பொலிவு பெறும், கூந்தல் வலிமையடையும். பல்வேறு ஆய்வுகளின்படி, பேரிட்சையை அன்றாடம் சாப்பிடும்போது உடல் ஆற்றல் அதிகரிக்கும்.