இயற்கை மற்றும் மனிதர்களின் வாழ்வில் யானைகளின் பங்கு இருக்கு தெரியுமா.!

சுற்றுச்சூழலில் யானைகளின் பங்களிப்பு குறித்து உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது

யானைகள் இயற்கைக்கு எவ்வளவு முக்கியம், யானைகள் மனித வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்காகத் தான் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது

இதுகுறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த சிறார் எழுத்தாளர் சூடாமணி கூறுகையில், 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் வனத்துக்குள் திரும்பு அப்படி என்ற படம் வெளிவந்தது

அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. நாம் எதற்கு யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

யானை ஒரு நாளைக்குப் பல கிலோமீட்டர் நடக்கிறது. அவைகள் சாப்பிட்டது அப்படியே ஜீரணமாகி விடாது. பாதி செமிக்கும் பாதி செமிக்காமல் இருக்கும். அது கழிவாக வெளியேறி உரமாக மாறுகிறது

இதன் மூலம் மண் மரம் செடி கொடி இவை எல்லாம் செழிக்கிறது. விரைவில் இவை அனைத்தும் வனமாக மாறும். வனம் மலைக்கு மிக முக்கியமானது

மலை நீருக்கு தேவை. நீர் மனிதர்களுக்குத் தேவை. அப்படி என்றால் மனிதர்களுக்கு மிக முக்கியமான தேவை யானைகள். இதை பற்றி தெரிந்துகொள்ள நிறையப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்

அப்பொழுது யானைக்குக் கொஞ்சம் மனநிலை சரியில்லாததால் அவரை தள்ளிவிட்டது. பாரதியார் கல் மீது விழுந்ததால் அடிபட்டது. அதிலிருந்து பாரதியார் மீண்டு வந்து விட்டார்

அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது தான் அவர் இறந்து போனார். இந்த தகவலைப் புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்

புத்தகங்களை அதிகமாக வாசித்து பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக யானைகளைப் பற்றி நிறைய விஷயங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

next

தென்காசியில் இந்த அருவிக்கு மட்டும் குளிக்க போகாதீங்க.!