கீரை சாகுபடி... மாதம் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.!
குறைந்த இடத்தில் அதிக அளவில் லாபம் பார்க்கக் கூடிய ஒரே பயிர் சாகுபடி என்றால் அது கீரை சாகுபடி தான்
கீரை சாகுபடிக்கு தனியாக பட்டம் கிடையாது. அதிகமாக மழை பெய்யும் காலத்தை தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் கீரைகளை விதைத்து பயன்பெறலாம்
நிலத்தை நன்கு உழுது 6 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்தி எடுத்து 10 கிலோ தொழுஉரம் தூவ வேண்டும். கீரை விதைகளை விதைத்த 3ம் நாள் முளைவிடும். அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும்
ஈரப்பதத்தை பொறுத்து பாசனம் செய்தால் போதும். 22 முதல் 30 நாட்களில் அரைக்கீரை, சிறுகீரை, தண்டுகீரை அறுவடைக்கு வரும். சிறுகீரை, தண்டு கீரையை வேருடன் பிடுங்க வேண்டும்
கீரைகளுக்கு சுழற்சி முறையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நன்றாக பாத்தி அமைத்து களைகள் இல்லாமல் கீரைகளை பராமரித்தால் இன்னும் கூடுதல் விளைச்சல் கிடைக்கும்
இங்கே விளைவிக்கும் கீரை கட்டுகளை அறுவடை செய்து உழவர் சந்தைகளிலும், உள்ளூர்களிலும் விற்பனை செய்து வருகிறார்கள்
இங்கு அறுவடை செய்யப்படும் கீரைக்கட்டுகளை வியாபாரிகளுக்கு 20 அல்லது 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 150 கீரை கட்டுகள் வரை அறுவடை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம் என விவசாயி முருகன் கூறினார்